நியூட்டனின் பகீர் கணிப்பு உலக முடிவு எப்போது என்பது குறித்து பகீர் கணிப்புகளை அறிவியல் மேதை சேர் ஜசக் நியூட்டன் தமது குறிப்புக்களில் பதிவு செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறிவியல் மேதை சேர் ஜசக் நியூட்டன் தமது கணிப்புக்களை 1704. ஆம் ஆண்டு காலகட்டத்தில் குறித்துவைத்துள்ளார்.
அதில் பெருமைக்குரிய ரோமப்பேரரசு உருவாகி 1260 ஆண்டுகள் முடிவடையும் காலகட்டத்தில், அதாவது 2060 ஆம் ஆண்டு உலகமுடிவு தொடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூட்டன் விவிலியத்தில் உள்ள தானியேல் தீர்க்கதரிசியின் வசனங்களை ஆராய்ந்து தமது கணிப்புகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் நியூட்டன் விவிலியத்தின் வசனங்களை ஆராய்ந்து எப்படி ஒரு முடிவுக்குவந்தார் என்பது மர்மமாகவே உள்ளது என்பது 300 கடந்தும் மர்மமாகவே உள்ளது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நியூட்டனின் குறிப்பில் உலக முடிவு நெருங்கும் நிலையில் பல தீர்க்கதரிசிகளும் தங்களது கருத்துக்களை மக்களின் முன்பு வைப்பார்கள் ஆனால் அவர்களின் கணிப்புக்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும் மட்டுமன்றி கொள்கையற்ற தேசங்களால் அழிவு தொடங்கும்.
2060 அழிவு நிட்சயம் இந்த விவகாரம் தொடர்பிலௌ கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் நடந்தேறும் அனைத்து விடயங்களும் நியூட்டனின் கணிப்புக்களை பிரதிபலிக்கின்றன என்கிறார்.
மேலும் சுமார் 50 ஆண்டுகாலம் ஆராய்ந்த கணிப்புக்களை நியூட்டன் 4500 பக்கங்களில் பதிவுசெய்துள்ளார் எனவும் ஆனால்,ஒரு முடிவுரையை எழுதாமல் விட்டுவிட்டார் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...
Comments
Post a Comment